என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது: சிம்பு

நடிகர் சிம்பு பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி முடித்துள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து அவர் வெளியிட்ட ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது ‘செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மணிரத்னமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. அஞ்சலி படம் பார்த்து கஷ்டப்பட்டேன். இவருடைய இயக்கத்தில் நடிக்க வில்லை என்று வருத்தப்பட்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நம்மால் நடிக்க
 

என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது: சிம்பு

நடிகர் சிம்பு பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி முடித்துள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து அவர் வெளியிட்ட ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது

‘செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மணிரத்னமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. அஞ்சலி படம் பார்த்து கஷ்டப்பட்டேன். இவருடைய இயக்கத்தில் நடிக்க வில்லை என்று வருத்தப்பட்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நம்மால் நடிக்க முடியாது என்று நினைத்தேன்.

என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது: சிம்புஆனால், எனக்கு மணிரத்னம் வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் நடிக்க கூடாது என்று பல பிரச்சனைகள் தடைகள் வந்தாலும், அதையும் தாண்டி என் மேல் நம்பிக்கை வைத்தார். அவருக்கு பெரிய நன்றி. படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.

நான் வேலையை சரியாக செய்வதில்லை என்று எப்பவும் ஒரு குற்றச்சாட்டு இருந்துக் கொண்டே இருக்கிறது. நான் என் வேலையை மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்ததிலிருந்து சினிமாவில்தான் இருக்கிறேன். அதை விட்டா வேற எதுவும் தெரியாது. எனக்கு வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லை.

என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது. என்னால ஒரு விஷயம் தப்பா இருக்கிறது என்றால், நான் மாற்றிக் கொள்வேன். தவறில் இருந்து கற்றுக் கொள்வேன். தப்பு பண்ணா மன்னிப்பு கேட்பேன். ஆனால், பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.

இதுக்கு அப்புறம் படத்தில் நடிப்பேனா, சினிமாவில் இருப்பேனா என்று தெரியவில்லை’

இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.

From around the web