‘செம போத ஆகாதே: திரைவிமர்சனம்

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் பேச்சிலராக வாழ்ந்து வரும் அதர்வா, சபலத்தால் ஒரு பெண்ணை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வருகிறார். அந்த நேரத்தில் திடீரென வெளியே போக வேண்டிய ஒரு சூழல் ஏற்படுகிறது. வெளியே போய்விட்டு மீண்டும் திரும்பிவந்தபோது அந்த பெண் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார். இதனால் அதிர்ச்சியாகும் அதர்வா, நண்பன் கருணாகரனுடன் சேர்ந்து பிணத்தை மறைத்து வைத்து, கொலைகாரனையும் கண்டுபிடிப்பதே இந்த படத்தின் மீதிக்கதை அதர்வாவுக்கு ஏற்ற சரியான வேடம். குடிபோதையில் ஒரு பெண்ணுடன் இருக்க
 

‘செம போத ஆகாதே: திரைவிமர்சனம்

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் பேச்சிலராக வாழ்ந்து வரும் அதர்வா, சபலத்தால் ஒரு பெண்ணை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வருகிறார். அந்த நேரத்தில் திடீரென வெளியே போக வேண்டிய ஒரு சூழல் ஏற்படுகிறது. வெளியே போய்விட்டு மீண்டும் திரும்பிவந்தபோது அந்த பெண் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார். இதனால் அதிர்ச்சியாகும் அதர்வா, நண்பன் கருணாகரனுடன் சேர்ந்து பிணத்தை மறைத்து வைத்து, கொலைகாரனையும் கண்டுபிடிப்பதே இந்த படத்தின் மீதிக்கதை

அதர்வாவுக்கு ஏற்ற சரியான வேடம். குடிபோதையில் ஒரு பெண்ணுடன் இருக்க வேண்டும் என்று கருணாகரனிடம் உளறிய ஒரே ஒரு வார்த்தையால் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட விபரீதங்களை நினைத்து நினைத்து வருந்துகிறார். காதல், காமெடி, ஆக்சன் என அனைத்து பிரிவிலும் ஸ்கோர் செய்கிறார். அதர்வாவுக்கு இந்த படம் ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றியை கொடுக்கும் படம் என்றால் அது மிகை இல்லை

‘செம போத ஆகாதே: திரைவிமர்சனம்நாயகி மிஷ்தி டாக்டராக நடித்துள்ளார். கவர்ச்சி, காமெடி என புகுந்து விளையாடியுள்ளார். இவரது கேரக்டர் சிறியது என்றாலும் திருப்தி தரும் வகையில் உள்ளது.

அனோகாசோட்டி தான் அதர்வாவால் அழைத்து வரப்படும் விலைமாது பெண். முதல் பத்து நிமிடங்கள் கவர்ச்சியில் கலக்கிவிட்டு பின்னர் கிளைமாக்ஸ் வரை பிணமாகவே நடித்துள்ளார். பிணமாக நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்

கருணாகரன் தான் இந்த படத்தின் மிகபெரிய பிளஸ். பிணத்துடன் அவர் இருக்கும் காட்சியில் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. மேலும் அவ்வப்போது அவர் கொடுக்கும் டைமிங் கவுண்ட்டருக்கு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கின்றது

‘செம போத ஆகாதே: திரைவிமர்சனம்மனோபாலா, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், ஜான்விஜய் உள்பட இந்த படத்தின் சின்னச்சின்ன கேரக்டர்களையும் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் சரியாக பயன்படுத்தியுள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘செம போத ஆகாதே’ பாடல் உள்பட அனைத்து பாடல்களும் கேட்கும் வகையில் உள்ளது. பின்னணி இசையும் கதையின் போக்கிற்கேற்ப நன்றாக உள்ளது.

இயக்குனர் பத்ரிவெங்கடேஷ் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் அதில் சில ஆக்சன், த்ரில்லர், இரட்டை அர்த்த வசனம் என பல்சுவையுடன் திரைக்கதை அமைத்துள்ளார். ஆங்காங்கே டுவிஸ்ட் வைத்து படத்தை தொய்வில்லாமல் நகர்த்தியிருப்பதால் எந்த இடத்திலும் போரடிக்கவில்லை.

மொத்தத்தில் செம ஜாலியான படம்

ரேட்டிங்: 3.5/5

From around the web