பிரபல இளம் பாடகி விபத்தில் அகால மரணம்

மலையாள திரையுலகின் இளம் பாடகி மஞ்சுஷா மோகன் தாஸ் நேற்று நடந்த விபத்து ஒன்றில் அகால மரணம் அடைந்தார். அவருக்கு பிரியதர்ஷன் என்ற கணாவரும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் மஞ்சுஷா சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மினிவேன் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மஞ்சுஷா, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணம் அடைந்தார். அவருடன் சென்ற தோழி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 

பிரபல இளம் பாடகி விபத்தில் அகால மரணம்

மலையாள திரையுலகின் இளம் பாடகி மஞ்சுஷா மோகன் தாஸ் நேற்று நடந்த விபத்து ஒன்றில் அகால மரணம் அடைந்தார். அவருக்கு பிரியதர்ஷன் என்ற கணாவரும் ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் மஞ்சுஷா சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மினிவேன் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மஞ்சுஷா, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணம் அடைந்தார். அவருடன் சென்ற தோழி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரள திரையுலகின் இளம் பாடகி விபத்தில் இறந்த சம்பவம் கேரள நடிகர், நடிகைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

From around the web