‘குணா’வாக மாறிய சமுத்திரக்கனி:

பிரபல நடிகர் சமுத்திரக்கனி, குணசித்திர மற்றும் வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் முதல்முதலாக தனுஷின் ‘வடசென்னை’ படத்தில் அவர் ஒரு சாமியாடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கேரக்டரின் ஃபர்ஸ்ட்லுக்கை சற்றுமுன் தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கன்னத்தில் அலகு குத்தி சாமியாட்டம் ஆடும் சமுத்திரக்கனியின் அட்டகாசமான இந்த ஃபர்ஸ்ட்லுக் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஹீரோ தனுஷுக்கு இணையாக சமுத்திரக்கனியின் இந்த கேரக்டர் படத்தில் இருப்பதாகவும், சமுத்திரக்கனியும் இந்த
 
vadachennai

‘குணா’வாக மாறிய சமுத்திரக்கனி:

பிரபல நடிகர் சமுத்திரக்கனி, குணசித்திர மற்றும் வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் முதல்முதலாக தனுஷின் ‘வடசென்னை’ படத்தில் அவர் ஒரு சாமியாடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த கேரக்டரின் ஃபர்ஸ்ட்லுக்கை சற்றுமுன் தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கன்னத்தில் அலகு குத்தி சாமியாட்டம் ஆடும் சமுத்திரக்கனியின் அட்டகாசமான இந்த ஃபர்ஸ்ட்லுக் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹீரோ தனுஷுக்கு இணையாக சமுத்திரக்கனியின் இந்த கேரக்டர் படத்தில் இருப்பதாகவும், சமுத்திரக்கனியும் இந்த கேரக்டரை உள்வாங்கி மிக அருமையாக நடித்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web