தனுஷ், விஷாலுடன் மோதும் ஜோதிகா

வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் தனுஷின் ‘வடசென்னை’ மற்றும் விஷாலின் ‘சண்டக்கோழி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ திரைப்படமும் இந்த படங்களுடன் மோதுகிறது. ஆம், ஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி’ திரைப்படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி வெளியீடு என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். ‘துமாரி சூளு’ என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக் படமான
 

தனுஷ், விஷாலுடன் மோதும் ஜோதிகாவரும் அக்டோபர் 18ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் தனுஷின் ‘வடசென்னை’ மற்றும் விஷாலின் ‘சண்டக்கோழி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ திரைப்படமும் இந்த படங்களுடன் மோதுகிறது.

ஆம், ஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி’ திரைப்படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி வெளியீடு என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

‘துமாரி சூளு’ என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் வித்யாபாலன் கேரக்டரில் ஜோதிகா நடித்துள்ளார். ஜோதிகாவுடன் விதார்த், லட்சுமி மஞ்சு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாசிப் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

From around the web