டீசரை லைக் செய்த ரசிகர்கள் விஜய்யை ஏன் ஃபாலோ செய்யவில்லை?

விஜய் நடித்த திரைப்படங்களின் டீசர், டிரைலர் ஆகியவற்றை டுவிட்டரிலும், யூடியூபிலும் லைக் செய்யும் விஜய் ரசிகர்கள், விஜய்யின் டுவிட்டர் பக்கத்தை ஏன் ஃபாலோ செய்யவில்லை என டுவிட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் டீசர் நேற்று வெளியானபோது, இந்த டீசர் வெளியான 5 மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்ஸ்களை அள்ளியது. அதேபோல் வெகுவிரைவில் இரண்டு மில்லியன் லைக்ஸ்களை பெற்றுவிடும் என்று தெரிகிறது. அதேபோல் இந்த டீசரை சுமார் 15 மில்லியன்
 
sarkar teaser

டீசரை லைக் செய்த ரசிகர்கள் விஜய்யை ஏன் ஃபாலோ செய்யவில்லை?

விஜய் நடித்த திரைப்படங்களின் டீசர், டிரைலர் ஆகியவற்றை டுவிட்டரிலும், யூடியூபிலும் லைக் செய்யும் விஜய் ரசிகர்கள், விஜய்யின் டுவிட்டர் பக்கத்தை ஏன் ஃபாலோ செய்யவில்லை என டுவிட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் டீசர் நேற்று வெளியானபோது, இந்த டீசர் வெளியான 5 மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்ஸ்களை அள்ளியது. அதேபோல் வெகுவிரைவில் இரண்டு மில்லியன் லைக்ஸ்களை பெற்றுவிடும் என்று தெரிகிறது. அதேபோல் இந்த டீசரை சுமார் 15 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

டீசரை லைக் செய்த ரசிகர்கள் விஜய்யை ஏன் ஃபாலோ செய்யவில்லை?ஆனால் அதே நேரத்தில் இத்தனை மில்லியன் விஜய் ரசிகர்கள், விஜய்யின் அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தை ஏன் ஃபாலோ செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் விஜய்யின் டுவிட்டர் பக்கத்தை 1.74 மில்லியன் பேர் மட்டுமே ஃபாலோ செய்துள்ளனர். மேலும் விஜய்யின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட ‘சர்கார்’ டீசரை வெறும் 66 ஆயிரம் பேர் மட்டுமே லைக் செய்துள்ளனர். யூடியூபில் லைக் செய்த ஒரு மில்லியன் பேர் ஏன் விஜய் பக்கத்தில் உள்ள டீசரை லைக் செய்யவில்லை என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை

From around the web