சர்கார் கதை திருட்டு விவாகாரம்: வருண் ராஜேந்திரனுடன் ஏஆர் முருகதாஸ் திடீர் சமரசம்

‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடைய ‘செங்கோல்’ கதை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த எழுத்தாளரும் துணை இயக்குனருமான வருண் ராஜேந்திரனுடன் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சன்பிக்சர்ஸ் திடீரென சமரசம் செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்கார் திரைப்படத்தின் கதை ‘செங்கோல்’ கதைதான் என எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் எழுத்துபூர்வமாக கொடுத்த ஆதாரத்தை அடுத்து வருண்ராஜேந்திரனின் வழக்கு வலுவாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே ‘சர்கார்’ படக்குழுவினர் அவருடன் சமரசம் செய்து கொண்டதாக தெரிகிறது. இருதரப்புக்கும் இடையே என்ன
 

சர்கார் கதை திருட்டு விவாகாரம்: வருண் ராஜேந்திரனுடன் ஏஆர் முருகதாஸ் திடீர் சமரசம்

‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடைய ‘செங்கோல்’ கதை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த எழுத்தாளரும் துணை இயக்குனருமான வருண் ராஜேந்திரனுடன் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சன்பிக்சர்ஸ் திடீரென சமரசம் செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்கார் திரைப்படத்தின் கதை ‘செங்கோல்’ கதைதான் என எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் எழுத்துபூர்வமாக கொடுத்த ஆதாரத்தை அடுத்து வருண்ராஜேந்திரனின் வழக்கு வலுவாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே ‘சர்கார்’ படக்குழுவினர் அவருடன் சமரசம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இருதரப்புக்கும் இடையே என்ன மாதிரியான சமரசம் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் இன்னும் சற்றுநேரத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

From around the web