ராகவா உதவி செய்த பள்ளிக்கு விசிட் அடித்த ஓவியா

ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் ‘காஞ்சனா 3’ படத்தில் ஓவியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்து அந்த பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து சீரமைக்க உதவினார். பழைய கட்டிடமாக இருந்த பள்ளிகளை சீரமைத்து தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி கொடுத்துள்ள இந்த
 

ராகவா உதவி செய்த பள்ளிக்கு விசிட் அடித்த ஓவியா

ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் ‘காஞ்சனா 3’ படத்தில் ஓவியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்து அந்த பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து சீரமைக்க உதவினார். பழைய கட்டிடமாக இருந்த பள்ளிகளை சீரமைத்து தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி கொடுத்துள்ள இந்த பள்ளி இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திறப்பு விழாவை கண்டது.

இந்த திறப்பு விழாவில் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடிகை ஓவியா கலந்து கொண்டார். இந்த விழாவில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியபோது, ‘பள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோவில், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாகும் இடம் அரசாங்க பள்ளிகள் தான். அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகள் நல்ல கல்வியை கற்க முடியும்”

From around the web