சரோஜாதேவி வேடத்தில் அனுஷ்கா?

என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தற்போது தெலுங்கில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். மேலும் என்.டி.ஆர் திரையுலகில் பிரபலமாக இருந்தபோது அவருடன் நடித்த நடிகைகளின் கேரக்டர்களில் நடிக்கும் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. என்.டி.ராமராவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்த சாவித்திரியாக நித்யாமேனனும் ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங்கும் நடிக்கின்றனர். இதுபோல் என்.டி.ராமராவ் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள சரோஜாதேவி வேடத்தில் அனுஷ்கா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து
 
ntr-saroja

சரோஜாதேவி வேடத்தில் அனுஷ்கா?

என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தற்போது தெலுங்கில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா நடித்து வருகிறார்.

மேலும் என்.டி.ஆர் திரையுலகில் பிரபலமாக இருந்தபோது அவருடன் நடித்த நடிகைகளின் கேரக்டர்களில் நடிக்கும் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. என்.டி.ராமராவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்த சாவித்திரியாக நித்யாமேனனும் ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங்கும் நடிக்கின்றனர்.

இதுபோல் என்.டி.ராமராவ் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள சரோஜாதேவி வேடத்தில் அனுஷ்கா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த கேரக்டருக்காக உடல் எடையை குறைக்க அனுஷ்கா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிருஷ்ணா டைரக்டு செய்யும் இந்த படத்தில் என்.டி.ராமராவ் மனைவி பசவதாரம் கதாபாத்திரத்தில் வித்யாபாலனும், சந்திரபாபு நாயுடு கேரக்டரில் ராணாவும் கிருஷ்ணாவாக மகேஷ்பாபுவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web