மணிரத்னத்தின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராகும் கோவிந்த் வஸந்தா

சமீபத்தில் வெளீயான ’96’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணம் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா என்றால் அது மிகையாகாது. இந்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அந்த அளவுக்கு அற்புதமாக இருந்தது. இதுமாதிரியான படங்களுக்கு இசைஞானி இளையராஜா மட்டுமே இசையமைக்க முடியும் என்றிருந்த நிலையில் அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் அனைவரின் பாராட்டுக்களை பெறும் வகையில் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் ’96’ படத்தை அடுத்து விஜய்சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ள நிலையில் தற்போது மணிரத்னம் தயாரிக்கும் ஒரு
 
maniratnam govind

மணிரத்னத்தின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராகும் கோவிந்த் வஸந்தா

சமீபத்தில் வெளீயான ’96’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணம் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா என்றால் அது மிகையாகாது. இந்த படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அந்த அளவுக்கு அற்புதமாக இருந்தது. இதுமாதிரியான படங்களுக்கு இசைஞானி இளையராஜா மட்டுமே இசையமைக்க முடியும் என்றிருந்த நிலையில் அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் அனைவரின் பாராட்டுக்களை பெறும் வகையில் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் ’96’ படத்தை அடுத்து விஜய்சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ள நிலையில் தற்போது மணிரத்னம் தயாரிக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை கோவிந்த் வஸந்தா பெற்றுள்ளார்.

தனசேகரன் என்பவர் இயக்கும் இந்த படத்தை மணிரத்னம் தயாரிப்பது மட்டுமின்றி கதையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web