ஆர்யாவின் அடுத்த படத்தின் கதை என்ன தெரியுமா?

நடிகர் ஆர்யா தற்போது சூர்யா நடித்து வரும் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் நேற்று அவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை போடப்பட்டது என்பதும் இந்த படத்திற்கு ‘மகாமுனி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தை அருள்நிதி நடித்த ‘மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கவுள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இந்த
 

ஆர்யாவின் அடுத்த படத்தின் கதை என்ன தெரியுமா?

நடிகர் ஆர்யா தற்போது சூர்யா நடித்து வரும் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் நேற்று அவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை போடப்பட்டது என்பதும் இந்த படத்திற்கு ‘மகாமுனி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தை அருள்நிதி நடித்த ‘மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கவுள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

இந்த படம் ஒரு முக்கோண காதல் படம் என்றும், காமெடி மற்றும் செண்டிமெண்ட் கலந்த இந்த படத்தின் முடிவு இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் சினிமா பல முக்கோண காதல் கதைகளை பார்த்துள்ள நிலையில் இந்த படத்தில் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web