பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி

சமீபத்தில் அடித்த கஜா புயலுக்கு நாகை, தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.தென்னை மரங்கள் கீழே சாய்ந்தன. தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதிகமான கால்நடைகள் இறந்ததால் ஆடு, மாடு வளர்ப்போர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள். ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயன் போன்றோரும் தங்களால் முடிந்த தொகையினை கொடுத்தனர். நடிகர் ராகவா லாரன்ஸ் 50 பேருக்கு வீடு கட்டித்தருவேன் என்றிருக்கிறார். இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பத்து கோடி நிவாரண உதவி கொடுத்திருக்கிறார்.இதை
 

சமீபத்தில் அடித்த கஜா புயலுக்கு நாகை, தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.தென்னை மரங்கள் கீழே சாய்ந்தன. தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதிகமான கால்நடைகள் இறந்ததால் ஆடு, மாடு வளர்ப்போர் பாதிக்கப்பட்டனர்.

பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி

 

இந்நிலையில் பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள். ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயன் போன்றோரும் தங்களால் முடிந்த தொகையினை கொடுத்தனர். நடிகர் ராகவா லாரன்ஸ் 50 பேருக்கு வீடு கட்டித்தருவேன் என்றிருக்கிறார்.

இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பத்து கோடி நிவாரண உதவி கொடுத்திருக்கிறார்.இதை நடிகர் விஜய் சேதுபதி பாராட்டி கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருட்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரை துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன்…

From around the web