பிக்பாஸ் வின்னர் ரித்விகாவின் ஜாதி பற்றிய சர்ச்சை

தமிழில் மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரித்விகா. இப்படங்கள் இவருக்கு போதிய நல்ல பெயரை வாங்கி கொடுத்ததால் இவர் பிரபலமடைந்தார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரும் பங்கேற்றார். யதார்த்தமாக நடந்து கொண்டதும் எளிய முறையில் நடந்து கொண்டதும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை அடைய உதவின. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி அடைந்ததால் மிகுந்த புகழை அடைந்தார் ரித்விகா. இந்த டைட்டிலை ரித்விகா பெற்றவுடன், அதற்கு விமர்சனங்கள் எழ தவறவில்லை சிலர் ரித்விகா குறிப்பிட்ட சாதியை
 

தமிழில் மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரித்விகா. இப்படங்கள் இவருக்கு போதிய நல்ல பெயரை வாங்கி கொடுத்ததால் இவர் பிரபலமடைந்தார்.

பிக்பாஸ் வின்னர் ரித்விகாவின் ஜாதி பற்றிய சர்ச்சை

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரும் பங்கேற்றார். யதார்த்தமாக நடந்து கொண்டதும் எளிய முறையில் நடந்து கொண்டதும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை அடைய உதவின.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி அடைந்ததால் மிகுந்த புகழை அடைந்தார் ரித்விகா. இந்த டைட்டிலை ரித்விகா பெற்றவுடன், அதற்கு விமர்சனங்கள் எழ தவறவில்லை சிலர் ரித்விகா குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால்தான் பிக்பாஸ் டைட்டில் கிடைத்துள்ளது என்று இணையத்தில் பகிரங்கமாகவே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதற்கு ரித்விகா ஒரு டுவிட் மூலம் பதிலளித்துள்ளார்.

ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..” என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.

From around the web