இளையராஜா ராயல்டி கேட்பதில் தவறில்லை- ஜேம்ஸ் வசந்தன்

இசைஞானி இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்ட விவகாரம் குறிப்பாக மேடைப்பாடகர்கள் தனக்கு ஒரு சிறிய தொகை தரவேண்டும் என்ற விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. பலர் இளையராஜாவை எதிர்த்தும் சிலர் ஆதரித்தும் பேசிவரும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கே.ராஜன் மிக பகிரங்கமாக பேசியதும் தயாரிப்பாளர்களாகிய எங்களுக்கு என்ன தந்திங்க என காட்டமாக கேட்டதும் பிச்சைக்காரர்கள் அழகாக பாடுகிறார்கள் அவர்களிடம் இருந்தும் ராயல்டி வேண்டுமா என கேட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ்
 

இசைஞானி இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்ட விவகாரம் குறிப்பாக மேடைப்பாடகர்கள் தனக்கு ஒரு சிறிய தொகை தரவேண்டும் என்ற விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது.

இளையராஜா ராயல்டி கேட்பதில் தவறில்லை- ஜேம்ஸ் வசந்தன்பலர் இளையராஜாவை எதிர்த்தும் சிலர் ஆதரித்தும் பேசிவரும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கே.ராஜன் மிக பகிரங்கமாக பேசியதும் தயாரிப்பாளர்களாகிய எங்களுக்கு என்ன தந்திங்க என காட்டமாக கேட்டதும் பிச்சைக்காரர்கள்  அழகாக பாடுகிறார்கள் அவர்களிடம் இருந்தும் ராயல்டி வேண்டுமா என கேட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இளையராஜா ராயல்டி கேட்டதில் தவறில்லை ஆனால் அவர் சொல்லிய விதம் பலருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.

ராயல்டி விவகாரம் என்பது பல வருடங்களாக இருந்து வரும் விசயமாகும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது படங்கள் அனைத்திற்கும் தன் பாடல்களுக்கு சுலபமாக ராயல்டி வாங்கி கொண்டிருப்பவர் இது பலருக்கு தெரியவில்லை. அப்படி இருக்கையில் இளையராஜா ராயல்டி கேட்டதில் தவறில்லை என கூறி இருக்கிறார்.

இளையராஜாவை பற்றி சில மாதங்களுக்கு முன் சர்ச்சைகுரிய வகையில் பேசியதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீது அப்போது சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்தன.

From around the web