அஜித்தின் அடுத்த படத்தில் கெஸ்ட் ரோலில் ஷாலினி?

அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கும் எச்.வினோத், அதற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகிறார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ஜனவரியில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் ஆக்சன் கதை என்பதால் இந்த படத்தில் ரொமான்ஸ், செண்டிமெண்ட் காட்சிகளுக்கு இடமில்லை என்றும், அனேகமாக இந்த படத்தில் நாயகி இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அஜித் ரசிகர்களை திருப்தி செய்ய ஒரே ஒரு காட்சியில் ஷாலினி அஜித்
 

அஜித்தின் அடுத்த படத்தில் கெஸ்ட் ரோலில் ஷாலினி?

அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கும் எச்.வினோத், அதற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகிறார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ஜனவரியில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் ஆக்சன் கதை என்பதால் இந்த படத்தில் ரொமான்ஸ், செண்டிமெண்ட் காட்சிகளுக்கு இடமில்லை என்றும், அனேகமாக இந்த படத்தில் நாயகி இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் அஜித் ரசிகர்களை திருப்தி செய்ய ஒரே ஒரு காட்சியில் ஷாலினி அஜித் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அஜித் ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும், நீண்ட இடைவெளிக்கு பின் ஷாலினியை திரையில் பார்க்கும் வாய்ப்பு இந்த படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் விஜய்யின் ‘தளபதி 63’ படத்துடன் மோதும் வகையில் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியிடவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

அஜித், ஷாலினி, எச்.வினோத், த்ரில்லர், தளபதி 63

From around the web