அப்பப்பா என்ன உழைப்பு: ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குவியும் பாராட்டுக்கள்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கனா’ திரைப்படம் வரும் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் வெளியாகவுள்ளது. ரிலீசுக்கு முன்னரே இந்த படத்தின் எதிர்பார்பு எகிறி வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற ‘உன்னை விட்டால் உன்னை வெல்ல யாரும் இந்த மண்ணில் இல்லை’ என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்திற்காக எடுத்துள்ள ரிஸ்க் ஒவ்வொரு பிரேமிலும் தெரிவதாக ரசிகர்கள்
 

அப்பப்பா என்ன உழைப்பு: ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குவியும் பாராட்டுக்கள்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கனா’ திரைப்படம் வரும் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் வெளியாகவுள்ளது. ரிலீசுக்கு முன்னரே இந்த படத்தின் எதிர்பார்பு எகிறி வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற ‘உன்னை விட்டால் உன்னை வெல்ல யாரும் இந்த மண்ணில் இல்லை’ என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்திற்காக எடுத்துள்ள ரிஸ்க் ஒவ்வொரு பிரேமிலும் தெரிவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஒரு படத்திற்காக இந்த அளவுக்கு உழைக்கும் நடிகையும் உண்டா? என்ற ஆச்சரியம் இந்த பாட்லை பார்க்கும்போது ஏற்படுகிறது.

திபுநிணன் தாமஸ் கம்போஸ் செய்த இந்த பாடலை சித் ஸ்ரீராம்-நிரஞ்சனா ரமணன் பாடியுள்ளனர். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

From around the web