ஹிலாரி கிளிண்டனை சந்தித்து ஆச்சரியம் அடைந்த பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகையும் தேசிய விருது பெற்றவருமான நடிகை வித்யாபாலன் சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானியின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த ஹிலாரி கிளிண்டனை சந்தித்து பேசியுள்ளார். ஹிலாரியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்த வித்யா பாலன் கூறியதாவது: விலைமதிப்பற்ற புகைப்படம். நன்றி ஸ்மிருதி இராணி. எனக்கு ஹிலாரி கிளிண்டனை மிகவும் பிடிக்கும். விடாமுயற்சி கொண்டவர். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஹிலாரி வெற்றி பெறுவார் என்றே நினைத்தேன்.
 


ஹிலாரி கிளிண்டனை சந்தித்து ஆச்சரியம் அடைந்த பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகையும் தேசிய விருது பெற்றவருமான நடிகை வித்யாபாலன் சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானியின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த ஹிலாரி கிளிண்டனை சந்தித்து பேசியுள்ளார்.

ஹிலாரியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்த வித்யா பாலன் கூறியதாவது: விலைமதிப்பற்ற புகைப்படம். நன்றி ஸ்மிருதி இராணி. எனக்கு ஹிலாரி கிளிண்டனை மிகவும் பிடிக்கும். விடாமுயற்சி கொண்டவர். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஹிலாரி வெற்றி பெறுவார் என்றே நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

சில நாட்களுக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. ஒரு கண்ணாடி மேற்கூரையை உடைத்தால் மட்டுமே வானத்தை அடைய முடியும் என்று. அவர் நமக்காக உடைத்துள்ளார். எதிர்காலத்தில் யாராவது ஒருவர் நிச்சயம் வானத்தை அடைவார்.

உங்களுக்கு அவரைப் பிடிக்காமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவ்வளவுதான் நீங்கள் அவரைக் கணித்துள்ளீர்கள். எங்களுக்கு ஒரு ஹீரோவாக இருப்பதற்கு நன்றி ஹிலாரி” எனக் குறிப்பிட்டுள்ளார்

From around the web