நான் என்ன பாலியல் தொழிலாளியா? சின்மயி ஆவேசம்

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி தற்போது வாய்ப்பு ஏதும் இல்லாமல் உள்ளார். அவர் டப்பிங் யூனியனில் இருந்தும் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது: பெண்கள் சொல்லும் புகார் மீதான சமூகத்தின் அமைதி பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பலமாக்கும். மீடூவில் நான் புகார் சொன்ன பிறகு. நிறைய பெண்கள் என்னை இந்த சமூக வலைதளங்கள்
 


நான் என்ன பாலியல் தொழிலாளியா? சின்மயி ஆவேசம்

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி தற்போது வாய்ப்பு ஏதும் இல்லாமல் உள்ளார். அவர் டப்பிங் யூனியனில் இருந்தும் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:

பெண்கள் சொல்லும் புகார் மீதான சமூகத்தின் அமைதி பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பலமாக்கும். மீடூவில் நான் புகார் சொன்ன பிறகு. நிறைய பெண்கள் என்னை இந்த சமூக வலைதளங்கள் எப்படிப் பார்க்கிறது என்று உற்று நோக்கினார்கள்.

என்னை அவ்வளவு வசைபாடுகிறார்கள். தமிழில் இருக்கும் எல்லா கெட்ட வார்த்தைகளை சொல்லித்தந்த தமிழ் ஆண்மகன்களுக்கும் நன்றி. நீ யோக்கியமா? நீ ஒழுக்கமா? நீ உத்தமியா என்று கேட்பார்கள். அப்புறம் என்னை பாலியல் தொழிலாளி என்பார்கள். ஒரு வி‌ஷயம் சொல்கிறேன். நீங்கள் என்னை பாலியல் தொழிலாளி எனக் கூறுவதால் நான் வெட்கித் தலை குனிய மாட்டேன்.

இந்த உலகிலேயே ஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில். ஆண்களின் பல்வேறு பாலியல் தேவைக்காகவே இந்தத் தொழில் இருக்கிறது. ஒருவேளை அந்த தொழிலாளிகள் எல்லாம் திருந்திவந்தால் நீங்கள் சமூகத்தில் அவர்களுக்கு இடமா கொடுக்கப் போகிறீர்கள்? இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.


From around the web