எனக்கும் அவருக்கும் நிறம் மட்டும் தான் வித்தியாசம்

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘கேஜிஎஃப்’. தெலுங்கு நடிகர் யஷ் நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால் பேசியதாவது விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் ‘கேஜிஎஃப்’ படத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். KGF என்றால் (Kolar Gold Factory) கோலார் தங்க வயல். கோலார் அருகில் இருக்கும் இடம் தான் கோலார் தங்க வயல். நானும் அதற்கு அருகில் என் தந்தையின் கிரானைட் வியாபாரத்தில் 3 வருடம்
 


எனக்கும் அவருக்கும் நிறம் மட்டும் தான் வித்தியாசம்

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘கேஜிஎஃப்’. தெலுங்கு நடிகர் யஷ் நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால் பேசியதாவது

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் ‘கேஜிஎஃப்’ படத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். KGF என்றால் (Kolar Gold Factory) கோலார் தங்க வயல். கோலார் அருகில் இருக்கும் இடம் தான் கோலார் தங்க வயல். நானும் அதற்கு அருகில் என் தந்தையின் கிரானைட் வியாபாரத்தில் 3 வருடம் பணியாற்றியிருக்கிறேன். தொழில்நுட்ப வல்லமையை நிரூபிக்கும் வகையில் இப்படம் இருக்கும். அதேபோல் இப்படத்தின் கதையும் உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் இருக்கும். தயாரிப்பாளர், நாயகன், நாயகி மற்றும் இயக்குநர் என்று அனைவரும் நன்றாக அமைந்திருக்கிறார்கள்.

2.0 போல இந்த படமும் 3D யில் வெளியாகியிருந்தால் அனைவருக்கும் விருந்தாக இருந்திருக்கும். இப்படத்தை ஏன் விநியோகிக்கிறீர்கள்? என்று என்னிடம் கேட்டார்கள். எனது நட்பு வட்டாரம் மிகப்பெரியது.

அதில் என்னுடைய நெருக்கமான நண்பர் யஷ். என் உடன் பிறவா சகோதரரும் கூட. 2015ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தபோது, நிவாரண பொருட்கள் வேண்டும் என்று கூறியிருந்தேன். அப்போது முதலில் வந்த வாகனம் யஷ் அனுப்பியது தான். என்னுடைய பிரதிபலிப்பு தான் யஷ். நிறம் மட்டும் தான் வித்தியாசம். நான் எப்படி ஒரு கிராமத்திற்கு உதவி செய்கிறேனோ அதேபோல் யஷ்-ம் ஒரு கிராமத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து வைத்தார். அக்கிராமத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் கிடைக்கும் வரை தொடர்ந்து தண்ணீரை அனுப்பிக்கொண்டே இருந்தார். ஒரு மனிதர் செய்யும் செயலைக் கூறினால் தான் அடுத்தவர்களுக்கும் உந்துதலாக இருக்கும். ஆகையால் தான் இதை சொல்கிறேன்.

From around the web