சமந்தா நடிக்கும் கொரியன் ரீமேக் படம்

திருமணம் முடிந்து செட்டில் ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருபவர் சமந்தா. அவருக்கு திருமணம் ஆன பின்னும், சீமராஜா,இரும்புத்திரை, யு டர்ன் போன்ற திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி வாகை சூடியுள்ளன. இந்நிலையில் மிஸ் க்ரானி என்ற படத்தில் இவர் நடிக்கிறார் இது ஒரு கொரிய மொழி படமாகும். கணவனை இழந்த 74 வயதான பெண் ஒருத்தி, தான் குடும்பத்துக்குப் பாரமாக இருப்பதை உணர்கிறாள். ஒரு போட்டோ ஸ்டுடியோவுக்கு செல்லும் அவள், மந்திர சக்திகள் மூலம் 20
 

திருமணம் முடிந்து செட்டில் ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருபவர் சமந்தா. அவருக்கு திருமணம் ஆன பின்னும், சீமராஜா,இரும்புத்திரை, யு டர்ன் போன்ற திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி வாகை சூடியுள்ளன.

சமந்தா நடிக்கும் கொரியன் ரீமேக் படம்

இந்நிலையில் மிஸ் க்ரானி என்ற படத்தில் இவர் நடிக்கிறார் இது ஒரு கொரிய மொழி படமாகும். 


கணவனை இழந்த 74 வயதான பெண் ஒருத்தி, தான் குடும்பத்துக்குப் பாரமாக இருப்பதை உணர்கிறாள்.

ஒரு போட்டோ ஸ்டுடியோவுக்கு செல்லும் அவள், மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணின் தோற்றத்தைப் பெறுகிறாள். இதன்பிறகு ஏற்படும் சிக்கல்களை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் திரைக்கதையாக அமைத்திருப்பார்கள். 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் வெளியான இப்படம், 8.65 மில்லியன் டிக்கெட்டுகள் விற்று  மாபெரும் வெற்றி பெற்றது.

நந்தினி ரெட்டி இயக்கி வரும் இப்படத்தில், நாக சவுரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரண்டு கெட்டப்களில் சமந்தா நடித்து வருகிறார்.

From around the web