சத்யராஜ் உருவில் என் தந்தையை பார்த்தேன். ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கனா’ திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடந்தது. இந்த பிரஸ்மீட்டில் உருக்கமாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், தான் பத்து வயதிலேயே தனது தந்தையை இழந்துவிட்டதாகவும், ஆனால் சத்யராஜ் அவர்களுடன் நடித்தபோது அவருடைய உருவில் தனது தந்தையை பார்த்ததாகவும் உருக்கமாக கூறினார். ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் பெண் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார் என்பதும், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார் என்பதும்
 
சத்யராஜ் உருவில் என் தந்தையை பார்த்தேன். ஐஸ்வர்யா ராஜேஷ்


ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கனா’ திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடந்தது.

இந்த பிரஸ்மீட்டில் உருக்கமாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், தான் பத்து வயதிலேயே தனது தந்தையை இழந்துவிட்டதாகவும், ஆனால் சத்யராஜ் அவர்களுடன் நடித்தபோது அவருடைய உருவில் தனது தந்தையை பார்த்ததாகவும் உருக்கமாக கூறினார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் பெண் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார் என்பதும், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு திபு நைனன் தாமஸ் என்பவர் இசையமைத்துளளார். இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.


From around the web