மதங்களை புண்படுத்தும் எண்ணமில்லை- மஹா திரைப்பட இயக்குனர்

ஜமீல் என்ற இயக்குனர் இயக்கத்தில் மஹா என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக இது உருவாகி வருகிறது. இப்படம் காசி பின்னணியில் மர்மம் கலந்து உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா புகை பிடிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இக்காட்சியை நீக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். சர்கார் படத்தின் புகை பிடிக்கும் காட்சி போல இதுவும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இப்போது இந்த பிரச்சினை மத ரீதியிலான பிரச்சினை
 

ஜமீல் என்ற இயக்குனர் இயக்கத்தில் மஹா என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக இது உருவாகி வருகிறது.

மதங்களை புண்படுத்தும் எண்ணமில்லை- மஹா திரைப்பட இயக்குனர்

இப்படம் காசி பின்னணியில் மர்மம் கலந்து உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா  புகை பிடிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இக்காட்சியை நீக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். சர்கார் படத்தின் புகை பிடிக்கும் காட்சி போல இதுவும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இப்போது இந்த பிரச்சினை மத ரீதியிலான பிரச்சினை போல் சில அமைப்புகள் பிரச்சினை எழுப்பி வருகின்றனர். தெலுங்கானா பாரதிய ஜனதா எம்.எல். ஏ ராஜா சிங்கும் இப்போஸ்டர் குறித்து பேசியதால், படத்தின் இயக்குனர் ஜமீல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தயவு செய்து மத ரீதியிலான விஷயங்களுக்கு போகாதீர்கள், பார்வையாளர்களை சட்டென திரும்பி பார்க்கவே அந்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இதில் எந்த மதத்தையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

From around the web