பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் மம்முட்டி-அஞ்சலி நடித்த படம்

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் அஞ்சலி நடித்த படமான ‘பேரன்பு’ என்ற திரைப்படம் நீண்ட காலதாமதத்திற்கு பின்னர் வரும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக பிப்ரவரி 14, காதலர் தினத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ரிலீசுக்கு முன்னரே சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை குவித்த இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மம்முட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன் உள்பட பலர்
 


பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் மம்முட்டி-அஞ்சலி நடித்த படம்

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் அஞ்சலி நடித்த படமான ‘பேரன்பு’ என்ற திரைப்படம் நீண்ட காலதாமதத்திற்கு பின்னர் வரும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக பிப்ரவரி 14, காதலர் தினத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

ரிலீசுக்கு முன்னரே சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை குவித்த இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மம்முட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


From around the web