நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: கமல் அறிவிப்பால் குழம்பிய தொண்டர்கள்

2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். அடுத்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும், கமல்ஹாசன் தான் அடுத்த முதலமைச்சர் என்றும் அவரது தொண்டர்களும் ரசிகர்களும் கூறி வரும் நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதனால் இனிமேல் கமல்தான் அடுத்த முதல்வர்
 


நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: கமல் அறிவிப்பால் குழம்பிய தொண்டர்கள்

2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும், கமல்ஹாசன் தான் அடுத்த முதலமைச்சர் என்றும் அவரது தொண்டர்களும் ரசிகர்களும் கூறி வரும் நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதனால் இனிமேல் கமல்தான் அடுத்த முதல்வர் என்று கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் எந்த கட்சியுடன் கூட்டணி, எந்த கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக சொல்லாமல் ஒத்த கருத்துக்கள் உடைய கட்சிகளுடன் கூட்டணி என்றும், தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் கமல் மேலும் குழப்பியுள்ளதால் ரசிகர்கள் குழப்பத்தின் உச்சியில் உள்ளனர்.


From around the web