ஜிவி பிரகாஷ் நடித்த ‘வாட்ச்மேன்’ பர்ஸ்ட்லுக் வெளீயீடு

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் நாய் ஒன்று வாயில் துப்பாக்கி வைத்திருப்பது போன்று இருப்பதால் இணையதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் ஜோடியாக பிரபல கன்னட நடிகையும், கன்னட பிக்பாஸ் 5ஆம் பாகத்தில் கலந்து கொண்டவருமான சம்யுக்தா ஹெக்டே நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை
 


ஜிவி பிரகாஷ் நடித்த ‘வாட்ச்மேன்’ பர்ஸ்ட்லுக் வெளீயீடு

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ‘வாட்ச்மேன்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் நாய் ஒன்று வாயில் துப்பாக்கி வைத்திருப்பது போன்று இருப்பதால் இணையதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக பிரபல கன்னட நடிகையும், கன்னட பிக்பாஸ் 5ஆம் பாகத்தில் கலந்து கொண்டவருமான சம்யுக்தா ஹெக்டே நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அருண்மொழி மாணிக்கம் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

From around the web