முதல்முறையாக நெகட்டிவ் வேடத்தில் காஜல் அகர்வால்

குவீன் ரீமேக் படமான ‘பாரீஸ் பாரீஸ் படத்தில் காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ளது தெரிந்ததே. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்த நிலையில் அவர் தெலுங்கு படம் ஒன்றில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழில் ஏற்கனவே வரலட்சுமி உள்பட ஒருசில நடிகைகள் நெகட்டிவ் வேடத்தில் நடித்து பிரபலமாகி வரும் நிலையில் ஒரு புது
 


முதல்முறையாக நெகட்டிவ் வேடத்தில் காஜல் அகர்வால்

குவீன் ரீமேக் படமான ‘பாரீஸ் பாரீஸ் படத்தில் காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ளது தெரிந்ததே. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அவர் தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்த நிலையில் அவர் தெலுங்கு படம் ஒன்றில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழில் ஏற்கனவே வரலட்சுமி உள்பட ஒருசில நடிகைகள் நெகட்டிவ் வேடத்தில் நடித்து பிரபலமாகி வரும் நிலையில் ஒரு புது முயற்சியாக நெகட்டிவ் வேடத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும்


From around the web