பாடகராக மாறிய பிக்பாஸ் புகழ் நடிகர்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ், ஓவியாவுடன் நடித்து கொண்டிருக்கும் படம் ‘ராஜபீமா’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஆரவ் ஒரு பாடலை பாடியுள்ளார். இசையமைப்பாளர் சைமன் இசையில் ஆரவ் பாடிய இந்த பாடல் ஒரு மெலடி பாடல் என்றும், படத்தில் இந்த பாடல்தான் ஹைலைட் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இந்த பாடல் இன்னும் ஒருசில நாட்களில் சிங்கிள் பாடலாக வெளிவரவுள்ளது என்பதும்
 


பாடகராக மாறிய பிக்பாஸ் புகழ் நடிகர்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ், ஓவியாவுடன் நடித்து கொண்டிருக்கும் படம் ‘ராஜபீமா’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஆரவ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் சைமன் இசையில் ஆரவ் பாடிய இந்த பாடல் ஒரு மெலடி பாடல் என்றும், படத்தில் இந்த பாடல்தான் ஹைலைட் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இந்த பாடல் இன்னும் ஒருசில நாட்களில் சிங்கிள் பாடலாக வெளிவரவுள்ளது என்பதும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கி வரும் இந்த படத்தை எஸ்.மோகன் தயாரித்து வருகிறார். இந்த படம் ஒரு மிருக முரண்பாடுகளை பற்றி உருவாக்கப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.


From around the web