பேட்ட, விஸ்வாசம் படத்துடன் வெளியாகும் இன்னொரு தமிழ்ப்படம்

வரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் வெளியாவதால் போட்டி போட்டு கொண்டு இந்த இரண்டு படங்களுக்கும் திரையரங்குகள் புக் ஆகிக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ‘பரியேறும் பெருமாள்’ புகழ் கதிர் நடித்த ‘சிகை’ என்ற திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது. ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஆன்லைனில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிடிவியின் அதிகாரபூர்வமான செயலியில் இந்த படம் வரும் பொங்கல் முதல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட
 


பேட்ட, விஸ்வாசம் படத்துடன் வெளியாகும் இன்னொரு தமிழ்ப்படம்

வரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் வெளியாவதால் போட்டி போட்டு கொண்டு இந்த இரண்டு படங்களுக்கும் திரையரங்குகள் புக் ஆகிக்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ‘பரியேறும் பெருமாள்’ புகழ் கதிர் நடித்த ‘சிகை’ என்ற திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது. ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஆன்லைனில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிடிவியின் அதிகாரபூர்வமான செயலியில் இந்த படம் வரும் பொங்கல் முதல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாள் கிடப்பில் இருந்த இந்த படத்தில் மீரா நாயர், பிக்பாஸ் சாம்பியன் ரித்விகா, மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜெகதீஷ் பாபு இயக்கத்தில் ரான் எதான் யோஹன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.


From around the web