அஜித்தும் விஜயகாந்தும் இந்த விஷயத்தில் ஒண்ணு! ஜோதிகா

தல அஜித் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவர் நடித்த படங்கள் என்பதை விட அவர் ஒரு மனிதநேயம் உள்ளவர் என்றும், ஏழை எளியவர்களுக்கு உதவுபவர் என்பதுமே ஞாபகம் வரும். ஆனால் அவர் செய்யும் உதவிகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. உதவி பெற்றவருக்கே பல வருடங்கள் கழித்துதான் இந்த உதவியை அஜித்தான் செய்தார் என்பது தெரியவரும் இந்த நிலையில் அஜித்தும் விஜயகாந்தும் ஏழை எளியவர்களுக்கு நிறைய உதவிகளை பிறர் அறியாமல் செய்து வருவதாகவும், இவர்கள் இருவரும் தாங்கள்
 


அஜித்தும் விஜயகாந்தும் இந்த விஷயத்தில் ஒண்ணு! ஜோதிகா

தல அஜித் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவர் நடித்த படங்கள் என்பதை விட அவர் ஒரு மனிதநேயம் உள்ளவர் என்றும், ஏழை எளியவர்களுக்கு உதவுபவர் என்பதுமே ஞாபகம் வரும். ஆனால் அவர் செய்யும் உதவிகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. உதவி பெற்றவருக்கே பல வருடங்கள் கழித்துதான் இந்த உதவியை அஜித்தான் செய்தார் என்பது தெரியவரும்

இந்த நிலையில் அஜித்தும் விஜயகாந்தும் ஏழை எளியவர்களுக்கு நிறைய உதவிகளை பிறர் அறியாமல் செய்து வருவதாகவும், இவர்கள் இருவரும் தாங்கள் செய்த உதவிகளை வேறு யாரிடமும் கூறுவது இல்லை என்றும், செய்த உதவியை விளம்பரம் செய்வதில்லை என்றும் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.

அஜித்தையும் விஜயகாந்தையும் ஒப்பிட்டு ஜோதிகா பேசிய இந்த கருத்து அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


From around the web