ரஜினி மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் திருமணம்

ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு கடந்த 2010ல் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஷ்வினுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஏற்பட்டது. தற்போது சௌந்தர்யா விசாகன் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவியது. கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பொன்முடியின் சகோதரரும், தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன்தான் விசாகன். இவர் வஞ்சகர் உலகம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
 

ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு கடந்த 2010ல் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஷ்வினுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஏற்பட்டது.

தற்போது சௌந்தர்யா விசாகன் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவியது. கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பொன்முடியின் சகோதரரும், தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன்தான் விசாகன். இவர் வஞ்சகர் உலகம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

விசாகனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவர் தமிழகத்தில் மருந்துகளை விற்பனை செய்யும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான அபெக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன் தாய் லதா ரஜினிகாந்த் மற்றும் நெருங்கிய 20 நண்பகளுடன்  திருப்பதி சென்ற சௌந்தர்யா அங்குள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சென்று  சிறப்பு தரிசனம் செய்துள்ளார்.அப்போது தன் மறுமண பத்திரிகையை ஏழுமலையான் பாதத்தில் வைத்து பூஜித்துள்ளதாக தெரிகிறது.

From around the web