நயன்தாராவின் அடுத்த படத்தின் கதை என்ன?

நயன்தாரா நடித்த ‘மாயா’ என்ற திகில் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் ஒரு திகில் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் பெயர் ‘ஐரா’. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது இந்த ட்ரைலரில் ‘மறுபடியும் பொட்ட புள்ள பிறந்திருக்குய்யா’ , ‘என் தலையெழுத்த யாருன்னே தெரியாத ஆறுபேர் கிறுக்கி எழுதி
 


நயன்தாராவின் அடுத்த படத்தின் கதை என்ன?

நயன்தாரா நடித்த ‘மாயா’ என்ற திகில் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் ஒரு திகில் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் பெயர் ‘ஐரா’. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது

இந்த ட்ரைலரில் ‘மறுபடியும் பொட்ட புள்ள பிறந்திருக்குய்யா’ , ‘என் தலையெழுத்த யாருன்னே தெரியாத ஆறுபேர் கிறுக்கி எழுதி இருக்காங்க’ , ‘உனக்காக நான் வருவேன்னு சொன்னேன்ல’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளதை அடுத்து இந்த படத்தின் கதையை நெட்டிசன்கள் சிலர் யூகித்துள்ளனர்.

இப்படம் பெண்சிசு கொலையை மையமாக வைத்து எடுத்திருப்பதாகவும் ஒரு நயன்தாரா இறந்து ஆவியாகி இன்னொரு நயன்தாராவுக்கு உதவி செய்வதுதான் கதை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நயன்தாரா முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் உருவான இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

From around the web