பேட்ட படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதே நாளில் தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ரிலீஸ் ஆக இருப்பதால் இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘பேட்ட’ படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா , கர்நாடகா , ஆந்திரா உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில்
 


பேட்ட படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதே நாளில் தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ரிலீஸ் ஆக இருப்பதால் இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘பேட்ட’ படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா , கர்நாடகா , ஆந்திரா உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் ‘பேட்ட’ படத்திற்கு திரையரங்கு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆந்திராவில் மூன்று பெரிய நடிகர்களின் தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால் ‘பேட்ட’ படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விஸ்வாசம் திரைப்படம் ஒருவாரம் கழித்தே தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


From around the web