இளையராஜா பாராட்டு நிகழ்ச்சிக்கான ப்ரமோ

அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இன்று இளையராஜா இல்லாவிட்டால் பலருக்கு தூக்கமே வருவதில்லை. பல ஆண்டுகள் கடந்த பின்னும் தாயின் தாலாட்டை போல இளையராஜாவின் பாடல்களே தாலாட்டி தூங்க வைத்து வருகிறது. தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து விட்டவர் இளையராஜா. நாட்டுப்புற பாடல்களையும் வெஸ்டர்ன் பாடல்களையும், கர்நாடக சங்கீதத்தையும் கரைத்து குடித்தவர். ராகங்களில் சில மாறுதல்கள் செய்து அதை பாமரர்களும் போற்றும் வகையில் கேட்கும் வகையில் செய்தவர் இசைஞானி. அவர் தமிழ் சினிமாவில்
 

அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இன்று இளையராஜா இல்லாவிட்டால் பலருக்கு தூக்கமே வருவதில்லை. பல ஆண்டுகள் கடந்த பின்னும் தாயின் தாலாட்டை போல இளையராஜாவின் பாடல்களே தாலாட்டி தூங்க வைத்து வருகிறது.

இளையராஜா பாராட்டு நிகழ்ச்சிக்கான ப்ரமோ

தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து விட்டவர் இளையராஜா. நாட்டுப்புற பாடல்களையும் வெஸ்டர்ன் பாடல்களையும், கர்நாடக சங்கீதத்தையும் கரைத்து குடித்தவர்.

ராகங்களில் சில மாறுதல்கள் செய்து அதை பாமரர்களும் போற்றும் வகையில் கேட்கும் வகையில் செய்தவர் இசைஞானி.

அவர் தமிழ் சினிமாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த சாதனையை எட்டினார்.

பாலா இயக்கத்தில் அவர் இசையமைத்த தாரை தப்பட்டை படமே அவருக்கு 1000மாவது படமாக இருந்தது.

இந்நிலையில் இசைஞானியின் இசை சாதனையை பாராட்டி ஒரு பெரிய பாராட்டு விழா வரும் பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெற இருக்கிறது.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் இவ்விழாவை நடத்துகிறது. இந்நிகழ்ச்சிக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.


From around the web