மீண்டும் வம்பில் சிக்கும் வைரமுத்து

ஆண்டாள், சின்மயி, மீடு என கடந்த வருடம் மீடியாக்கள் அதிகம் எழுதிய பெயர் வைரமுத்து என்ற பெயராகத்தான் இருக்கும். சிறிது நாட்களாக ஓய்ந்திருந்த வைரமுத்து விவகாரங்கள் இப்போது புதிய பிரச்சினையுடன் மீண்டும் வந்துள்ளது. 2011ம் ஆண்டு வந்த வாகை சூடவா படத்தில் இடம்பெற்ற சரசர சாரக்காத்து வீசும்போது பாடலை கவிஞர் வைரமுத்து எழுதி இருந்தார்.அதற்காக அந்த பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த, இப்படத்தில் மற்ற பாடல்கள் எழுதியவரும் 96 உள்ளிட்ட படங்களில்
 

ஆண்டாள், சின்மயி, மீடு என கடந்த வருடம் மீடியாக்கள் அதிகம் எழுதிய பெயர் வைரமுத்து என்ற பெயராகத்தான் இருக்கும். சிறிது நாட்களாக ஓய்ந்திருந்த வைரமுத்து விவகாரங்கள் இப்போது புதிய பிரச்சினையுடன் மீண்டும் வந்துள்ளது.

மீண்டும் வம்பில் சிக்கும் வைரமுத்து

2011ம் ஆண்டு வந்த வாகை சூடவா படத்தில் இடம்பெற்ற சரசர சாரக்காத்து வீசும்போது பாடலை கவிஞர் வைரமுத்து எழுதி இருந்தார்.அதற்காக அந்த பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த, இப்படத்தில் மற்ற பாடல்கள் எழுதியவரும் 96 உள்ளிட்ட படங்களில் பாடல் எழுதிய கார்த்திக் நேதா என்பவர் சர சர சாரக்காத்து தன்னுடைய பாடல் என்று கூறியுள்ளார்.

சரசர சார காத்து பாடலையும் தான் தான் எழுதியதாகவும், அதன் வரிகளை மட்டும் மேலும் கீழுமாக மாற்றி தனது பெயரில் வெளியிட செய்தார் வைரமுத்து என்று கூறியுள்ளார்.

தம்பி நீங்க எழுதினது தான் , ஆனா சார் கொஞ்சம் சேஞ்ச் பண்ணி அவர் பேர் போட சொல்லிட்டார், சாரி தம்பி என தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்ததாக கூறும் கார்த்திக், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இந்த திருட்டு தெரியாதா என்ற கேள்விக்கு, தெரியும் , ஆனால் அது அவரது முதல் படம், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை என கூறியுள்ளார்.

இது புதுவித சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

From around the web