மித்ரன் -சிவகார்த்திகேயன் இணையும் பட ஷூட்- அடுத்த மாதம் துவக்கம்

சிவகார்த்திகேயன் சமீபத்தில் கனா படத்தை தயாரித்திருந்தார். அவரது நண்பர் அருண்ராஜா காமராஜ் படத்தை இயக்கி இருந்தார். படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது. பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் வந்திருந்தது. இப்படத்தின் வெற்றிக்களிப்பில் இருந்து இன்னும் சிவகார்த்திகேயன் மீளவில்லை. தற்போது நயன் தாரா ஜோடியுடன் ராஜேஸ் எம் இயக்கும் காமெடி படத்தில் நடித்து வருகிறார். இவருடன் யோகிபாபு இணைந்து காமெடி செய்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க இருக்கிறது. ‘இரும்புத்திரை’ படத்தின்
 

சிவகார்த்திகேயன் சமீபத்தில் கனா படத்தை தயாரித்திருந்தார். அவரது நண்பர் அருண்ராஜா காமராஜ் படத்தை இயக்கி இருந்தார். படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது.

மித்ரன் -சிவகார்த்திகேயன் இணையும் பட ஷூட்- அடுத்த மாதம் துவக்கம்

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் வந்திருந்தது. இப்படத்தின் வெற்றிக்களிப்பில் இருந்து இன்னும் சிவகார்த்திகேயன் மீளவில்லை.

தற்போது நயன் தாரா ஜோடியுடன் ராஜேஸ் எம் இயக்கும் காமெடி படத்தில் நடித்து வருகிறார். இவருடன் யோகிபாபு இணைந்து காமெடி செய்கிறார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க இருக்கிறது. ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கோட்டபாடி ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

From around the web