என்னை கோபப்படுத்தினால் நானும் கோபமாவேன்: ரகுல் ப்ரீத்திசிங்

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளின் பட்டியலில் ஒருவர் ரகுல் ப்ரீத்திசிங் . இவர் தற்போது தமிழ் , ஹிந்தி , தெலுங்கு , கன்னடம் போன்ற பல பொழிபடங்களில் நடித்து வருகிறார்.தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று , ஸ்பைடர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள சூர்யாவின் என்.ஜி.கே படத்திலும் கார்த்தியின் தேவ் படத்திலும் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே.-14 படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 


என்னை கோபப்படுத்தினால் நானும் கோபமாவேன்: ரகுல் ப்ரீத்திசிங்

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளின் பட்டியலில் ஒருவர் ரகுல் ப்ரீத்திசிங் . இவர் தற்போது தமிழ் , ஹிந்தி , தெலுங்கு , கன்னடம் போன்ற பல பொழிபடங்களில் நடித்து வருகிறார்.தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று , ஸ்பைடர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள சூர்யாவின் என்.ஜி.கே படத்திலும் கார்த்தியின் தேவ் படத்திலும் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே.-14 படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் தற்போது மிகவும் பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரகுல் ப்ரீத் சிங் காரிலிருந்து இறங்கி வருவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அவரது உடையை அசிங்கமாக திட்டும் வகையிலும் ஆபாச கருத்துக்களை தெரிவிக்கும் வகையிலும் டுவிட்டுகள் எழுந்தன. இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்தார் ரகுல் ப்ரீத் சிங்.

இந்த சம்பவத்தை பற்றி சமீபத்தில் கேள்வி கேட்டபொழுது என்னை கோபப்படுத்தினால் கண்டிப்பாக நானும் கோபமாவேன் பதில் கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


From around the web