கல்லூரி மாணவிகளுக்கு சிவகார்த்திகேயன் விடுத்த அழைப்பு!

சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ படம் நல்ல வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்போது எஸ்.கே – 15 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிக்க படக்குழுவினர் தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். அதாவது 6 முதல்
 
sivakarthikeyan


கல்லூரி மாணவிகளுக்கு சிவகார்த்திகேயன் விடுத்த அழைப்பு!

சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ படம் நல்ல வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தற்போது எஸ்.கே – 15 என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் நடிக்க படக்குழுவினர் தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். அதாவது 6 முதல் 8 வயதுள்ள ஆண் குழந்தைகளும் 7 முதல் 14 வயதுள்ள பள்ளி மாணவ மாணவியர்களும் 17 முதல் 21 வயதுள்ள கல்லூரி மாணவ மாணவிகளும் தேவைப்படுவதாக அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் இந்த படம் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவாளராகவும் ரூபன் படத்தொகுப்பாளராகவும் உள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இரும்புத்திரை படத்தை போலவே இந்த படத்திலும் அர்ஜுன் வில்லனாக நடித்து வருகிறார்.


From around the web