மான்ஸ்டர் படத்தின் புதிய அப்டேட்ஸ்

எஸ்.ஜே சூர்யா எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்ப்பதில் வல்லவர். அந்த வகையில் அவர் மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்பு இவர் நியூ என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். படத்தில் விவகாரமான காட்சிகள் அதிகம் இருந்தாலும் இப்படம் வரவேற்பை பெற்றது. அதாவது வாலிபன் குழந்தை என மாறி மாறி இப்படத்தில் நடித்திருப்பார். அடுத்ததாக அ ஆ என்றொரு படம் மனசாட்சி பேசுவது போல காட்சியமைப்புகள் அதிகம் இருந்தன. இது கொஞ்சம் காமெடி
 

எஸ்.ஜே சூர்யா எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்ப்பதில் வல்லவர். அந்த வகையில் அவர் மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்பு இவர் நியூ என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

மான்ஸ்டர் படத்தின் புதிய அப்டேட்ஸ்

படத்தில் விவகாரமான காட்சிகள் அதிகம் இருந்தாலும் இப்படம் வரவேற்பை பெற்றது. அதாவது வாலிபன் குழந்தை என மாறி மாறி இப்படத்தில் நடித்திருப்பார்.

அடுத்ததாக அ ஆ என்றொரு படம் மனசாட்சி பேசுவது போல காட்சியமைப்புகள் அதிகம் இருந்தன. இது கொஞ்சம் காமெடி கலந்து வந்ததால் ஓரளவு வரவேற்பு பெற்றது.

இது போல கதைகளில் அதிக நாட்டம் செலுத்தும் எஸ்.ஜே சூர்யா சில வருடங்களாக இது போல கதைகளில் கவனம் இல்லாது அமைதி காத்து வந்தார்.

இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அப்படியாக ஒரு பேண்டஸி படத்தில் நடித்து வருகிறார். குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் இப்படம் காமெடி கலந்து தயாராகி வருகிறது.

நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் நடந்து வரும் வேலையில் அப்படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இப்படத்தில் வித்தியாசமான கார்ட்டுன் கதாபாத்திரங்களோடு இவர் நடிக்க உள்ளார். முக்கியமாக எலியோடு நடிக்க உள்ளார்.

எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இப்படத்தில் நடித்து வருகிறார்.

From around the web