இளையராஜாவுக்கு நீதிபதிகள் புகழாரம்

இசைஞானி இளையராஜாவின் இசை தான் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ளும் மருந்தே. வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுக்கும் பாட்டு போட்டவர் இசைஞானி இளையராஜா. அவரின் நிகழ்ச்சிக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்ததை நீதிபதிகளே விரும்பவில்லை போலும். இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான வரவு செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்ற பின்னர், இந்த
 

இசைஞானி இளையராஜாவின் இசை தான் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ளும் மருந்தே. வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுக்கும் பாட்டு போட்டவர் இசைஞானி இளையராஜா.

இளையராஜாவுக்கு நீதிபதிகள் புகழாரம்

அவரின் நிகழ்ச்சிக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்ததை நீதிபதிகளே விரும்பவில்லை போலும்.

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான வரவு செலவு கணக்குகளை கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்ற பின்னர், இந்த வழக்கை இறுதி நேரத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும், இது சரியான செயல் அல்ல என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில், இந்தி பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தவர்களை, தமிழ் பாடல் கேட்க வைத்தவர் இளையராஜா தான் என்று, நீதிபதிகள் கூறினர்.

இந்தி பாடல்களுக்கு மெட்டமைக்க, தமிழ் இசையை காப்பியடிக்கும் அளவிற்கு, மிகத்தரமான முறையில் இசையமைத்து சாதனை படைத்தவர் இளையராஜா என நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.

இந்தியாவே உற்று நோக்கும் மிகப்பெரிய கலைஞனுக்கு நடத்தும் பாராட்டு விழாவுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்ததன் மூலம் அவரை அவமதித்து விட்டீர்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இளையராஜா 75 நிகழ்ச்சியின், வரவு-செலவு தொடர்பான கணக்கு விவரங்களை 2 வாரத்தில் தாக்கல் செய்யவும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

From around the web