இளையராஜா – ரஹ்மான் காம்பினேஷன் எப்படி- பார்த்திபன் விளக்கம்

இளையராஜாவிடம் ஒரு காலத்தில் கீ போர்டு ப்ளேயராக பணியாற்றியவர் ஏ.ஆர் ரஹ்மான். மூன்றாம் பிறை, மூடு பனி என ரஹ்மானின் இசை இளையராஜாவுடன் சில படங்களில் தொடர்ந்தது. புன்னகை மன்னன் தீம் இசையில் ரஹ்மானும் சேர்ந்து விளையாடி இருக்கிறார் என்பது பேச்சு. ரஹ்மான் திரைக்கு வந்த பிறகு ராஜா, ரஹ்மான் ரசிகர்கள் என இரு அணிகள் உருவாகின. இவர்கள் ஒருவர் பாடலை ஒருவர் குறை சொல்லி கொண்டு எதிரிகள் போலவே சண்டை போட்டார்கள். சமூக வலைதளங்கள் வந்த
 

இளையராஜாவிடம் ஒரு காலத்தில் கீ போர்டு ப்ளேயராக பணியாற்றியவர் ஏ.ஆர் ரஹ்மான். மூன்றாம் பிறை, மூடு பனி என ரஹ்மானின் இசை இளையராஜாவுடன் சில படங்களில் தொடர்ந்தது. புன்னகை மன்னன் தீம் இசையில் ரஹ்மானும் சேர்ந்து விளையாடி இருக்கிறார் என்பது பேச்சு.

இளையராஜா – ரஹ்மான் காம்பினேஷன் எப்படி- பார்த்திபன் விளக்கம்

ரஹ்மான் திரைக்கு வந்த பிறகு ராஜா, ரஹ்மான் ரசிகர்கள் என இரு அணிகள் உருவாகின. இவர்கள் ஒருவர் பாடலை ஒருவர் குறை சொல்லி கொண்டு எதிரிகள் போலவே சண்டை போட்டார்கள்.

சமூக வலைதளங்கள் வந்த பிறகு இந்த சண்டை இன்னும் அதிகமானது.

இந்நிலையில் முதன் முதலில் ராஜா 75 நிகழ்ச்சியில் ரஹ்மான்,ராஜா இருவரும் இசையமைக்க சேர்ந்து பாட என அமர்க்களமானது. இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வை நடிகர் பார்த்திபன் தான் ஏற்பாடு செய்தாராம். எம்.எஸ்.வியை கெளரவிக்க இளையராஜா இசை நிகழ்ச்சி செய்து அதில் வந்த வருமானத்தை எம்.எஸ். வி குடும்பத்துக்கு கொடுத்தார் அந்த நேரத்தில் இது போல ரஹ்மானை வைத்து ராஜா சாருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று பார்த்திபன் நினைத்தாராம்

அதனால் இந்த நிகழ்ச்சிக்கு ரஹ்மானிடம் முதலில் அனுமதி வாங்கி விட்டு ராஜா சாரிடம் தயங்கியபடி பார்த்திபன் சொல்ல உடனே க்ரீன் சிக்னல் ராஜா கொடுத்து விட்டாராம்.

From around the web