திருமண வாழ்க்கை பற்றி ராதிகா ஆப்தே

தோனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்திலும் நடித்திருந்தார். பின்பு சூப்பர் ஸ்டாருடனேயே கபாலி படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சில காலங்கள் எந்த தமிழ் படங்களிலும் இவரை பார்க்க முடியவில்லை. இவர் 8 வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆனவராம். இவர் பெனடிக் என்பவரை பல வருடம் முன்பே திருமணம் செய்து கொண்டாராம். இவர் தனது திருமண வாழ்க்கை பற்றி மனம் திறந்திருக்கிறார். நானும், எனது கணவரும் ஒருவர்
 

தோனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்திலும் நடித்திருந்தார். பின்பு சூப்பர் ஸ்டாருடனேயே கபாலி படத்தில் நடித்திருந்தார்.

திருமண வாழ்க்கை பற்றி ராதிகா ஆப்தே

இந்நிலையில் சில காலங்கள் எந்த தமிழ் படங்களிலும் இவரை பார்க்க முடியவில்லை.

இவர் 8 வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆனவராம்.

இவர் பெனடிக் என்பவரை பல வருடம் முன்பே திருமணம் செய்து கொண்டாராம்.

இவர் தனது திருமண வாழ்க்கை பற்றி மனம் திறந்திருக்கிறார்.

நானும், எனது கணவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்துள்ளோம். எங்களுக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தகராறுகள் வருவது உண்டு. ஆனாலும் அவை சிறிது நேரம்தான் இருக்கும். சண்டை போட்டால் உன்னுடன் பேச விருப்பம் இல்லை என்றோ, சிறிது நேரம் கழித்து பேசுவோம் என்றோ சொல்வது இல்லை. சில நிமிடங்களிலேயே இருவரும் பேசிவிடுவோம்.

யார் மீது தவறு இருந்தாலும் இருவருமே மன்னிப்பு கேட்டுக்கொள்வோம். கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டு நீண்ட நாட்கள் பேசாமல் இருந்தால் பிரச்சினைகள் பெரிதாகி விடும். சண்டையை மனதில் வைத்துக்கொள்ளாமல் மறந்து விடுவோம். எனக்கும், எனது கணவருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. நீ என்னை மதிக்கவில்லை. முக்கியத்துவம் தரவில்லை என்றெல்லாம் ஒருமுறை கூட சொன்னது இல்லை.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

From around the web