விவாகரத்து செய்யாமல் மறு திருமணம்- முகேஷ் மீது சரிதா குற்றச்சாட்டு

கடந்த 1980களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் சரிதா. தமிழில் மெளன கீதங்கள், அக்னி சாட்சி, ஊமை விழிகள், உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரது கணவர் பிரபல மலையாள நடிகர் முகேஷ். இவரும் தமிழில் ஜாதி மல்லி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நீண்ட நாட்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த முகேஷ்-சரிதா தம்பதியினரிடையே சில வருடங்கள் முன் பிரிவு ஏற்பட்டது. துபாயில் வசிக்கும் அவர் சமீபத்தில் ஐதராபாத் வந்தபோது சொல்லிய விசயங்கள் இவை கணவர் முகேஷ் எனக்கு ஆதரவாக இல்லை. அவர்
 

கடந்த 1980களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் சரிதா. தமிழில் மெளன கீதங்கள், அக்னி சாட்சி, ஊமை விழிகள், உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரது கணவர் பிரபல மலையாள நடிகர் முகேஷ். இவரும் தமிழில் ஜாதி மல்லி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

விவாகரத்து செய்யாமல் மறு திருமணம்- முகேஷ் மீது சரிதா குற்றச்சாட்டு

நீண்ட நாட்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த முகேஷ்-சரிதா தம்பதியினரிடையே சில வருடங்கள் முன் பிரிவு ஏற்பட்டது.

துபாயில் வசிக்கும் அவர் சமீபத்தில் ஐதராபாத் வந்தபோது சொல்லிய விசயங்கள் இவை

கணவர் முகேஷ் எனக்கு ஆதரவாக இல்லை. அவர் எனக்கு சரியானவர் இல்லை என்பது தாமதமாகத்தான் தெரிந்தது. அன்பு, நேசிப்பு, எதுவும் கிடையாது. ஆனாலும் எங்கள் இருவர் இடையில் கடவுள் தங்கம் மாதிரி இரண்டு குழந்தைகளை கொடுத்து இருக்கிறார். அதுபோதும்.


எனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே முகேஷ் வேறு திருமணம் செய்து கொண்டார். மோசடி செய்து விவாகரத்து பத்திரம் வாங்கி கொண்டார்.


இந்த விஷயத்தில் நான் வழக்கு போட்டு இருந்தால் 7 வருடம் அவர் சிறையில் இருந்து இருப்பார். ஆனால் அப்படி செய்ய வில்லை. அவர் செல்வாக்கு மிகுந்த மனிதர். வழக்கு தொடர்ந்தாலும் அவரை என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ கேரளாவில் என்னை எதுவும் செய்ய முடியாது என்று நேரடியாக சவால் விட்டார். போலீசில் புகார் கொடுத்தும் பயன் இல்லை. அதன்பிறகு அந்த விஷயத்தை கடவுளிடமே விட்டு விட்டேன்.

From around the web