சிவகார்த்திகேயன் பிறந்த நாள் இன்று- சிறப்பு பதிவு

நடிகர் சிவகார்த்திகேயனின் 35 வது பிறந்த நாள் இன்று. தமிழ்த்திரையுலகத்தில்இன்று மிகவும் பிஸியான நடிகராக சிவகார்த்திகேயன் விளங்குகிறார். ஆரம்ப காலங்களில் விஜய் டிவியில் வந்த கலக்கப்போவது யாரு சீசன் 2வில் கலந்து கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்தார். அந்த நேரங்களில் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் முக்கியமானதொரு நிகழ்ச்சியாகவும் அனைவரும் பார்க்கும் ப்ரைம் டைம் நேரமான இரவு 10 முதல் 11 மணி வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். நிறைய ரசிகர்களை அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பெற்றார்.
 

நடிகர் சிவகார்த்திகேயனின் 35 வது பிறந்த நாள் இன்று.

சிவகார்த்திகேயன் பிறந்த நாள் இன்று- சிறப்பு பதிவு

தமிழ்த்திரையுலகத்தில்இன்று மிகவும் பிஸியான நடிகராக சிவகார்த்திகேயன் விளங்குகிறார்.

ஆரம்ப காலங்களில் விஜய் டிவியில் வந்த கலக்கப்போவது யாரு சீசன் 2வில் கலந்து கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்தார். அந்த நேரங்களில் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் முக்கியமானதொரு நிகழ்ச்சியாகவும் அனைவரும் பார்க்கும் ப்ரைம் டைம் நேரமான இரவு 10 முதல் 11 மணி வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

நிறைய ரசிகர்களை அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பெற்றார். குறிப்பாக மிமிக்ரியில் பேசுவதை வழக்கமாக இருந்த இந்த நிகழ்ச்சியில் மிமிக்ரியை வைத்தே புது புது கான்செப்ட் பிடித்தார். இவரின் நிகழ்ச்சிக்கு அந்த நேரத்தில் நிகழ்ச்சியின் நடுவர் உமா ரியாஸ் நீண்ட நேரம் சிரிப்பார். நீண்ட நேரம் என்றால் ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய் சிரிப்பாரே அது போல.

இந்த நிகழ்ச்சியின் வின்னர் ஆக சிவகார்த்திகேயனே வந்து 2 லட்சம் பரிசு பெற்றார். தொடர்ந்து விஜய் சிவியின் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று அந்த டிவியின் பிரபலமான ஷோவான அது இது எது நிகழ்ச்சியையும் ரசனையுடன் அழகாக நகைச்சுவையாக தொகுத்து வழங்கினார்.

இவரின் திறமையை கண்டு இயக்குனர் பாண்டிராஜ் தனது மெரினா படத்தில் கதாநாயகனாக நடிக்க அழைத்தார். தொடர்ந்து எழிலின் மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் பட்டி தொட்டி சிட்டியெங்கும் பிரபலமாகி இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

மான் கராத்தே, ரஜினி முருகன், வேலைக்காரன் என சிவகார்த்திகேயனின் சினிமா பயணம் தொடர்ந்தது.

முன்னணி நடிகையான ஹன்சிகா உட்பட இவருடன் ஆரம்பத்திலேயே ஜோடியாக நடித்தது பலருக்கு வியப்பாக இருந்தது.

தொடர்ந்து இவரின் க்ராஃப் ஏற இன்று முன்னணி ஹீரோவாகி விட்டார். இன்று எல்லா முன்னணி கதாநாயகிகளும் இவருடன் நடிக்க போட்டி போடுகின்றனர்.

சிவகார்த்திகேயன் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர் நல்ல அழகிய தோற்றம் மற்றும் ஸ்க்ரிப்ட் உருவாக்கும் திறமை பெற்றவர். இது அவருக்கு சினிமாவில் நல்ல ப்ளஸ். ரொம்ப சுமாரான கதையாக இருந்தாலும் சிவகார்த்திகேயனின் பாடி லாங்வேஜ் டயலாக் டெலிவரி போன்றவற்றால் அதை சிறப்பான படமாக மாற்றி விடுவார் சிவா.

சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த லாபத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்து வருகிறது.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் கனா உள்ளிட்ட படங்களை தயாரித்து படத்தயாரிப்பிலும் இறங்கி விட்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவே முழுவதும் மாறிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

From around the web