இளையராஜாவின் பின்னணி இசையை வைத்து கான்செர்ட் நிகழ்ச்சி நடக்குமா

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் வயது பேதமில்லாமல் எல்லாருக்கும் பிடிக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விசயம். பாடல்களில் எந்த அளவு ஜீவனோடு உயிர் கொடுத்து அந்த பாடலை உருவாக்கியுள்ளாரோ அதைவிட பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். பல படங்கள் நன்றாக ஓடியதற்கு காரணம் இளையராஜாவின் பின்னணி இசைதான் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். படத்தின் காட்சிக்கேற்ப அதை ரசித்து உணர்வுப்பூர்வமாக பின்னணி இசையை செதுக்குவதில் இளையராஜா ஒரு இசை சிற்பி. முதல் மரியாதை, பூவே பூச்சூடவா, சிந்து பைரவி
 

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் வயது பேதமில்லாமல் எல்லாருக்கும் பிடிக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விசயம்.

இளையராஜாவின் பின்னணி இசையை வைத்து கான்செர்ட் நிகழ்ச்சி நடக்குமா

பாடல்களில் எந்த அளவு ஜீவனோடு உயிர் கொடுத்து அந்த பாடலை உருவாக்கியுள்ளாரோ அதைவிட பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

பல படங்கள் நன்றாக ஓடியதற்கு காரணம் இளையராஜாவின் பின்னணி இசைதான் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

படத்தின் காட்சிக்கேற்ப அதை ரசித்து உணர்வுப்பூர்வமாக பின்னணி இசையை செதுக்குவதில் இளையராஜா ஒரு இசை சிற்பி.

முதல் மரியாதை, பூவே பூச்சூடவா, சிந்து பைரவி இந்த படங்களின் அருமையான இனிமையான இளையராஜாவின் பின்னணி இசை படம் வெற்றியடைவதற்க்கும் இன்று வரை அதை நாம் புகழ்வதற்கும் ஒரு காரணம்.

80களில் ரஜினி படங்களாக இருந்தாலும் கமல் படங்களாக இருந்தாலும் அவர்களின் அதிரடி காட்சிகள், ஸ்டைல் காட்சிகள் பலவற்றுக்கு இளையராஜாவின் பின்னணி இசையே முன்னணி வகித்தது.

கோபுர வாசலிலே என்ற திரைப்படம் படத்தின் டைட்டிலேயே ரயில் போகும் தடக் தடக் சவுண்டிலேயே ஒரு அழகான புல்லாங்குழலை வாசித்து ஒரு இனிமை பரவ செய்வார் இளையராஜா.

மெளனராகம், நாயகன், சின்னக்கவுண்டர் என எத்தனையோ படங்களுக்கு இளையராஜாவின் பின்னணி இசையே பிரதானம்.

திகில் படங்களில் நூறாவது நாள்,புலன் விசாரணை  உள்ளிட்ட படங்களில் பின்னணி இசையில் வெளுத்து வாங்கி இருப்பார் இளையராஜா.

நூறாவது நாள் படத்தின் க்ளைமாக்ஸில் ஒரு நீண்ட பின்னணி இசையை நிகழ்த்தி இருப்பார் இளையராஜா. சீட்டின் நுனிக்கே வரவைக்கும் திகில் பின்னணி இசை அது.

படத்தில் வந்த பின்னணி இசை ஆல்பமாக வந்தது என்றால் இவர் இசையமைத்த பிள்ளை நிலா படத்தின் பின்னணி இசையை தொகுத்து ஆல்பமாகவே வெளியிட்டிருந்தனர் அந்த நேரத்தில்.

நத்திங் பட் வைண்ட், ஹவ் டூ நேம் இட் என்று பின்னணி இசைக்காகவே இசைஞானி இளையராஜா இரண்டு ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். ஆல்பம் வந்த நாளில் இருந்து இன்று வரை இளையராஜா ரசிகர்கள் அந்த இரண்டு இசை ஆல்பங்களை மிகவும் ரசித்து  வருகின்றனர்.

இப்படி பின்னணி இசையில் விளையாடும் இளையராஜா அளவு தமிழ் சினிமாவில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாசித்ததில்லை.

சமூக வலைதள இளையராஜா ரசிகர்கள் அடிக்கடி வைக்கும் கோரிக்கை என்னவென்றால் இளையராஜா தனியாக பின்னணி இசைக்கென ஒரு மியூசிக் கான்செர்ட் நடத்த வேண்டும் என்பதே.

பாடல்களுக்கு அடிக்கடி இசைஞானி மியூசிக் கான்செர்ட் நடத்துகிறார். அது போல பின்னணி இசைக்கும் நடத்த வேண்டும் என்பது ரசிகர்கள் பலரின் விருப்பம்.

இது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web