கார்த்திக்கு பயிற்சி அளித்த அபிநந்தனின் தந்தை

சென்னை போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் மாட்டியதும் பல்வேறு நாடுகளின் அழுத்தத்தால் இன்று அவர் நாடு திரும்புவதும் அறிந்ததே. இதே போன்று ஒரு சம்பவத்தை தான் கடந்த 2017-ம் ஆண்டில் வெளியான ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் படமாக்கி இருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் கார்த்தி நடித்து இருந்தார். அதில் அவர் விமானப்படை வீரராக வந்தார். அவர் எல்லை தாண்டி செல்லும்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி விடுவார். பின்னர் அங்கு
 

சென்னை போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் மாட்டியதும் பல்வேறு நாடுகளின் அழுத்தத்தால் இன்று அவர் நாடு திரும்புவதும் அறிந்ததே.

கார்த்திக்கு பயிற்சி அளித்த அபிநந்தனின் தந்தை

இதே போன்று ஒரு சம்பவத்தை தான் கடந்த 2017-ம் ஆண்டில் வெளியான ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் படமாக்கி இருந்தார்.


மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் கார்த்தி நடித்து இருந்தார். அதில் அவர் விமானப்படை வீரராக வந்தார். அவர் எல்லை தாண்டி செல்லும்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி விடுவார்.

பின்னர் அங்கு கடும் சித்ரவதை அனுபவிக்கும் அவர், பாகிஸ்தானியர்களின் பிடியில் இருந்து தப்பி இந்தியாவுக்கு திரும்புவதை திரைக்கதையாக்கி இருந்தனர்.

இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தி ராணுவ வீரர்களிடம் கடுமையான பயிற்சிகளை பெற்றார்.

குறிப்பாக தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் உள்ள அபிநந்தன் தந்தையும் அவருக்கு பயிற்சி அளித்து இருந்தார்.


தனக்கு பயிற்சி அளித்தவரின் மகனே, அந்த படத்தின் கதையைப்போல பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியிருக்கும் சம்பவத்தை அறிந்து கார்த்தி அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

From around the web