யோகிபாபுவின் எமதர்மன் டீசர் இன்று வெளியீடு

யோகிபாபு நடித்து வரும் படம் எமதர்மன். முழுக்க முழுக்க நகைச்சுவை சித்திரமாக மலரும் இப்படத்தை முத்துக்குமரன் இயக்குகிறார். எமதர்மனின் சபையை மையமாக கொண்டு முழுக்க முழுக்க காமெடிப்படமாக குழந்தைகளை கவரும் பொருட்டு வரும் மே மாதம் இப்படம் ரிலீஸ் ஆகிறது. இதற்கு முன் தமிழில் எமனுக்கு எமன், அதிசயப்பிறவி, லக்கிமேன் போன்ற படங்களில் எமதர்ம சபை அதன் பின்னணியில் நடக்கும் சபை காமெடி காட்சிகளை நமக்கு தமிழ் சினிமா தந்தது. நடுவில் இந்திரலோகத்தில் ந. அழகப்பன் படத்தில்
 

யோகிபாபு நடித்து வரும் படம் எமதர்மன். முழுக்க முழுக்க நகைச்சுவை சித்திரமாக மலரும் இப்படத்தை முத்துக்குமரன் இயக்குகிறார்.

யோகிபாபுவின் எமதர்மன் டீசர் இன்று வெளியீடு

எமதர்மனின் சபையை மையமாக கொண்டு முழுக்க முழுக்க காமெடிப்படமாக குழந்தைகளை கவரும் பொருட்டு வரும் மே மாதம் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

இதற்கு முன் தமிழில் எமனுக்கு எமன், அதிசயப்பிறவி, லக்கிமேன் போன்ற படங்களில் எமதர்ம சபை அதன் பின்னணியில் நடக்கும் சபை காமெடி காட்சிகளை நமக்கு தமிழ் சினிமா தந்தது.

நடுவில் இந்திரலோகத்தில் ந. அழகப்பன் படத்தில் எமதர்ம சபை காட்சிகள் வந்தாலும் படம் வெற்றி அடையவில்லை. காட்சிகளும் பேசப்படவில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு எமதர்ம சபை களத்தில் இந்த படம் வருகிறது.

மே மாதம் ரிலீஸ் ஆகும் இப்படத்துக்கான டீசர் இன்று மாலை ரிலீஸ் ஆகிறது. இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் இப்படத்தின் டீசரை இன்று மாலை 6மணியளவில் வெளியிடுகிறார்.

From around the web