வெள்ளைப்பூக்கள் எப்படி உள்ளது படம்

விவேக் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ள படம் வெள்ளைப்பூக்கள்.அமெரிக்காவை சேர்ந்த விவேக்கின் நெருங்கிய நண்பர்கள் தயாரித்துள்ள இப்படம் துப்பறியும் படமாகும். அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்கு ஓய்வுக்கு செல்கிறார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விவேக். அங்கு மகனுடன் நெருங்கி பழகும் விவேக், மருமகளுடன் சரி வர பேசாமல் இருக்கிறார். காரணம் என்னவென்றால் மகனின் வெளிநாட்டு காதல் திருமணம் விவேக்குக்கு பிடிக்கவில்லை. அங்கு ஓய்வை கழிக்கும் விவேக்குக்கு அங்கு வாழும் தமிழ் குடும்பமான சார்லி
 

விவேக் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ள படம் வெள்ளைப்பூக்கள்.அமெரிக்காவை சேர்ந்த விவேக்கின் நெருங்கிய நண்பர்கள் தயாரித்துள்ள இப்படம் துப்பறியும் படமாகும்.

வெள்ளைப்பூக்கள் எப்படி உள்ளது படம்

அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்கு ஓய்வுக்கு செல்கிறார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விவேக்.

அங்கு மகனுடன் நெருங்கி பழகும் விவேக், மருமகளுடன் சரி வர பேசாமல் இருக்கிறார். காரணம் என்னவென்றால் மகனின் வெளிநாட்டு காதல் திருமணம் விவேக்குக்கு பிடிக்கவில்லை.

அங்கு ஓய்வை கழிக்கும் விவேக்குக்கு
அங்கு வாழும் தமிழ் குடும்பமான சார்லி , அவரது மகளான பூஜா தேவரியாவுடன் இரண்டு குடும்பங்களும் நெருங்கிப் பழகுகிறது. 

இந்நிலையில் ஒரு பெண் பக்கத்து வீட்டில் கடத்தப்பட அதை தன் போலீஸ் மூளையால் ஆராய்கிறார் விவேக். அப்போது அதே தெருவில் ஒரு பையனும் கடத்தப்பட்டு அடுத்ததாக அவரின் சொந்த மகனும் கடத்தப்பட ஏன் எதற்கு என்பதை விறுவிறுப்பாக சுறு சுறுப்பாக சொல்லி இருக்கும் படம்தான் வெள்ளைப்பூக்கள்.

விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக் , சார்லி , பூஜா தேவரியா , தேவ் , பெய்ஜ் ஹேண்டர்ஸன் நடித்துள்ளனர்.

நல்ல கதையம்சமுள்ள படம் பார்க்கும் ரகம் இப்படம்.

From around the web