தொடர் நெருக்கடியில் அட்லி

ராஜா ராணி தொட்டே அட்லி காப்பி மன்னன் என்ற பெயரே தொடர்ந்து வருகிறது. சத்ரியன் தெறியாகவும், மெர்சல் , அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம் உள்ளிட்ட பல படங்களின் கலவையாகவும் இருந்தது மறுக்க முடியாதது ஆகும். மெர்சல் பட கதை தொடர்பாக மிக பெரும் பஞ்சாயத்துக்கள் நடந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கே.பி செல்வா என்பவர் தான் கூறிய கதையைத்தான் தற்போது அட்லி படமாக்கி வருகிறார் என கூறுகிறார். அட்லிக்கும் தனக்கும் தெரிந்த பொது நண்பர்கள் சிலருக்கு
 

ராஜா ராணி தொட்டே அட்லி காப்பி மன்னன் என்ற பெயரே தொடர்ந்து வருகிறது. சத்ரியன் தெறியாகவும், மெர்சல் , அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம் உள்ளிட்ட பல படங்களின் கலவையாகவும் இருந்தது மறுக்க முடியாதது ஆகும்.

தொடர் நெருக்கடியில் அட்லி

மெர்சல் பட கதை தொடர்பாக மிக பெரும் பஞ்சாயத்துக்கள் நடந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கே.பி செல்வா என்பவர் தான் கூறிய கதையைத்தான் தற்போது அட்லி படமாக்கி வருகிறார் என கூறுகிறார்.

அட்லிக்கும் தனக்கும் தெரிந்த பொது நண்பர்கள் சிலருக்கு தன்னுடைய கதை தெரியும் என்றும் அவர்கள் மூலம் கதை பரவி அட்லியிடம் சென்று விட்டதாகவும், அட்லிக்கு நன்கு தெரிந்த நடிகை ஒருவருக்கு கதை சொன்னதாகவும் அதன் மூலம் கூட அட்லி இப்படத்தை இயக்கி வரலாம் எனவும் அவர் சொல்லி வருகிறார்.

இவ்வளவு பிரச்சினையில் அவர்களிடம் இருந்து எந்த கேள்விக்கும் பதில் இல்லை என்றும் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

விஜயிடம் கேட்கலாமே என்ற கேள்விக்கு விஜயிடம் கேட்பது நியாயமில்லை அவர் இயக்குனர் சொன்ன கதை பிடித்து நடிக்கிறார். இயக்குனரைத்தான் நாம் கேட்க முடியும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.

அதிகார பலத்தில் இருக்கும் அட்லியிடம் இருந்து சரியானதொரு பதில் கிடைக்குமா என்றும் அவர் கூறி வருகிறார். அட்லியை சந்திக்க முயற்சி செய்தாலும் அவர் பிசியாக இருக்கிறார் என்றே பதில் வருகிறதாம்

ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் லைட் அறுந்து தொழிலாளி மேல் விழுந்தது, துணை நடிகை சாப்பாடு தரவில்லை என்று அட்லி மீது அடுக்கடுக்கான புகார்கள் சொன்னது, கதை பிரச்சினை என பல்வேறு கட்ட செய்திகளில் சமீபமாக அட்லி அடிபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web