தேவயானி பிறந்த நாள் இன்று

தமிழில் கே.எஸ் அதியமான் இயக்கத்தில் தொட்டாச்சிணுங்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தேவயானி. பொதுவாக வட இந்திய நடிகைகள் தமிழில் அறிமுகமாகும்போது கவர்ச்சி காண்பிக்க இயக்குனர்கள் விரும்புவார்கள். தேவயானியும் இதற்கு விதி விலக்கல்ல ஆரம்ப காலங்களில் நடித்த தொட்டாச்சிணுங்கி, கல்லூரி வாசல் உள்ளிட்ட படங்களில் லேசான கவர்ச்சியோடுதான் நடித்திருப்பார். அதற்கடுத்த படங்களில் கவர்ச்சியை சுத்தமாக கை விட்டு குடும்ப பாங்கான வேடங்களில் நடித்தார். இதனால் பெண்களால் மிகவும் விரும்பப்பட்டார். சூர்ய வம்சம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக
 

தமிழில் கே.எஸ் அதியமான் இயக்கத்தில் தொட்டாச்சிணுங்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தேவயானி. பொதுவாக வட இந்திய நடிகைகள் தமிழில் அறிமுகமாகும்போது கவர்ச்சி காண்பிக்க இயக்குனர்கள் விரும்புவார்கள். தேவயானியும் இதற்கு விதி விலக்கல்ல ஆரம்ப காலங்களில் நடித்த தொட்டாச்சிணுங்கி, கல்லூரி வாசல் உள்ளிட்ட படங்களில் லேசான கவர்ச்சியோடுதான் நடித்திருப்பார்.

தேவயானி பிறந்த நாள் இன்று

அதற்கடுத்த படங்களில் கவர்ச்சியை சுத்தமாக கை விட்டு குடும்ப பாங்கான வேடங்களில் நடித்தார். இதனால் பெண்களால் மிகவும் விரும்பப்பட்டார். சூர்ய வம்சம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக இருந்த ராஜகுமாரனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது அந்த நேரங்களில் நீ வருவாய் என ஒரு படமும் தேவயானியை வைத்து இயக்கினார் ராஜகுமாரன். பின்பு விண்ணுக்கும் மண்ணுக்கும் இயக்கினார். தேவயானியை திருமணமும் முடித்தார்.

பல வெற்றிப்படங்களில் நடித்த தேவயானி கோலங்கள் என்ற சீரியல் மூலம் பெண்களை இன்னும் கவர்ந்தார். பிறகு சீரியல்களிலும் கவனத்தை குறைத்த தேவயானி ஒரு ஆங்கிலப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்ப்பதாக செய்திகள் வந்தது. கணவர் ராஜகுமாரின் சொந்த ஊர் பகுதிகளில் நிலங்களை வாங்கி விவசாயமும் பார்த்து வருவதாக தெரிகிறது.

இன்று தேவயானியின் பிறந்த நாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவயானி.

From around the web