ஊடகங்களை யாரும் தாழ்த்த வேண்டாம்- விவேக்

இரண்டு நாட்களுக்கு முன் நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது ஊடகங்கள் அனைத்தும் ஓட்டுப்போட வந்த விவேக்கிடம் மைக்கை தூக்கி கொண்டு ஓடிவந்து நடிகர் சங்க தேர்தல் பற்றி கருத்து கூற சொல்லின. உடனே அதற்கு பதிலளித்த விவேக் நாட்ல எவ்வளவோ பிரச்சினை இருக்கு சிட்லபாக்கம் ஏரிய தூர் வாருறாங்க அத போய் கவரேஜ் பண்ணுங்க , இரண்டாயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் உள்ள நடிகர் சங்க தேர்தலுக்கு ஏன் இவ்வளவு அக்கறை காட்றிங்க என கொஞ்சம் நக்கல் கலந்து
 

இரண்டு நாட்களுக்கு முன் நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது ஊடகங்கள் அனைத்தும் ஓட்டுப்போட வந்த விவேக்கிடம் மைக்கை தூக்கி கொண்டு ஓடிவந்து நடிகர் சங்க தேர்தல் பற்றி கருத்து கூற சொல்லின.

ஊடகங்களை யாரும் தாழ்த்த வேண்டாம்- விவேக்

உடனே அதற்கு பதிலளித்த விவேக் நாட்ல எவ்வளவோ பிரச்சினை இருக்கு சிட்லபாக்கம் ஏரிய தூர் வாருறாங்க அத போய் கவரேஜ் பண்ணுங்க , இரண்டாயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் உள்ள நடிகர் சங்க தேர்தலுக்கு ஏன் இவ்வளவு அக்கறை காட்றிங்க என கொஞ்சம் நக்கல் கலந்து காட்டமாக கேட்டார். இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பலர் ஊடகங்களை மோசமான வார்த்தைகளால் திட்டியும் விவேக்கை வாழ்த்தியும் பதிவிட்டனர்.

இதை கண்ட விவேக் இன்று இவ்வாறு டுவிட்செய்துள்ளார்.

தயவு செய்து யாரும் ஊடகங்களை தாழ்த்திப் பதிவிட வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எனது பல ஆண்டு பசுமை முயற்சிகளை ஆதரித்ததும் மக்களிடம் கொண்டு சேர்த்தும் நம் ஊடகங்கள் தான் என்பதை நன்றியோடு நினைவு கூர்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார் விவேக்.

From around the web